காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டினால் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் 11 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் பிரித்தானியாவில் சுமார் 2 மில்லியன் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதி ஆகியுள்ளது.
இதனையடுத்து காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுவது காவல்துறையினரால் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் வசூலிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஓட்டுநர்கள் தங்களது உரிமங்களை சரி பார்க்குமாறு நுகர்வோர் துறை நிபுணர் மார்ட்டின் லூயிஸ் கேட்டு கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளின் பெயர் மற்றும் முகவரி சரியாக இல்லையெனில் காவல்துறையினரால் அந்த வாகனம் நிறுத்தப்பட்டால் பெரும் அபதாரம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.