Categories
சினிமா

“மொத்தமும் வேஸ்ட்”…. 410 கோடியை ஒரே வரியில் டோட்டல் டேமேஜ் செய்த பாடகர் ஸ்ரீனிவாஸ்…..!!!

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்து 410 கோடி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா.அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா மற்றும் மெளனி ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சுமார் 410 கோடி பட்ஜெட்டில் 5 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்காக பத்து ஆண்டுகளாக உழைத்தேன் என இயக்குனர் அயன் முகர்ஜி பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.இப்படத்தின் விமர்சனத்தை பாடகர் ஸ்ரீனிவாஸ் ஒரே வரியில் வெளியிட்டு கலாய்த்துள்ளார். அவர், பிரம்மாஸ்ட்ரா பார்க்கும்போது எப்போது இடைவெளி வரும் , எப்போது ஓடலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |