Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மொட்டை மாடியில் தூக்கம்…. “மழை வரும் போல” வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி…!!

மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்டர் வேலை பார்த்து வருகிறார். செல்வராஜ் தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அறிந்த திருடர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து திருடி உள்ளனர்.

இது தெரியாத செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது மழைக்கான அறிகுறியுடன் குளிர்ந்த காற்று வீசியதால் வீட்டினுள்ளே வந்துள்ளனர். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகையும் 1,200 ரூபாயும் திருடு போனது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பேட்டை காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். வீட்டில் காவலுக்கு நாய் வளர்த்து வந்த செல்வராஜ் கடந்த நான்கு வருடத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட நாய்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்ததால் தற்போது நாய் வளர்ப்பதை நிறுத்தி விட்டதாகவும் இதனால் மிகவும் எளிதாக திருடர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |