Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மைதாவில் செய்யும் உணவுகளை சாப்பிடலாமா…? அது உடம்பிற்கு நல்லதா…? அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அது சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதா என்பதை பற்றி பார்ப்போம்.

மைதா என்றாலே தீமைதான். மைதாவை உட்கொள்வதால் நமது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கூடுகிறது. நம்மை சுற்றியுள்ள அதிகபட்ச இனிப்பு வகைகள் யாவும் மைதாவைக் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் உண்ணும் பிஸ்கட் கூட மைதாதான். மைதா கோதுமையிலிருந்து தானே பெறப்படுகிறது என்கிறீர்கள். ஆமாமெனில் மைதா பழுப்பாக தானே இருக்கவேண்டும்? ஏன் வெள்ளை வெளீரென்று உள்ளது. காரணத்தை காண்போமா.?

இந்த அரைபட்ட கோதுமையின் கடைசி வெளியீட்டை (மைதாவை) வெண்மையாக்கும் வேதிப்பொருள் பென்சோயில் பெராக்சைடு. இதுமட்டுமல்லாமல் சுவையூட்டிகள் மற்றும் பல வேதிப்பொருட்கள் சேர்க்கப் படுகின்றன.

தீமைகள்:

இரத்த சர்க்கரையின் அளவினை அதிகப்படுத்தும்

மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும்

மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை . எனவே இதனை உண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை உண்டாகும்

மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும்.

மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும் . முக்கியமாக உங்களின் இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும்.

 

Categories

Tech |