Categories
தேசிய செய்திகள்

மைசூர் மாணவி வன்கொடுமை… “தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது”… போலீசார் அதிரடி..!!

மைசூரில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் 20 வயது மாணவி எம்.பி.ஏ படித்து வந்தார்.. அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை அவர் காதல் செய்து வந்தார். அந்த மாணவியும், காதலனும் கடந்த 24ஆம்  மாலை 5:30 மணி அளவில் ஒரு காரில் சாமுண்டி மலை அடிவாரத்தில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவியின் காதலனை பிடித்து சரமாரியாக தாக்கி, அந்த இளம்பெண்ணை இழுத்துச் சென்று புதருக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு அந்த இளம்பெண்ணிடம் இதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதையடுத்து காதலன் காதலியை அழைத்துச் சென்று அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் இளம்பெண்ணிடமும், காதலனிடமும் விசாரணை செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த போது கிடைத்த செல்போன் சிக்னல் அடிப்படையில் கர்நாடக தனிப்படை கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.. 5 கூலி தொழிலாளர்கள் கைதான நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை கர்நாடக போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றது.

இதுகுறித்து டிஜிபி பிரவீன் சூட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கைதான 5 பேரும் மைசூரில் இருந்து திருப்பூருக்கு செல்லும்போது, மது அருந்துவது வழக்கம்”.. இவர்கள் திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த கார்பென்டர், எலக்ட்ரீசியன், ஓட்டுனர்கள் ஆவர்.. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 17 வயதான சிறுவர் என்றும்,  தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருவதாகவும் அவர்  தெரிவித்தார்..

Categories

Tech |