விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடிக்கும் லிகர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “லிகர்” . இத்திரைப்படத்தை பூரி ஜெகன்நாத், கரன் ஜோகர், மற்றும் நடிகை சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரின் காட்சிகளை படமாக்க அமெரிக்காவில் சென்று படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.