Categories
மாநில செய்திகள்

மே 5 ஆம் தேதி வணிகர் சங்க பேரவை மாநில மாநாடு கிடையாது…. வணிகர் சங்க பேரவை தலைவர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தமிழ்நாடு வணிக சங்கப் பேரவை சார்பில் இந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி வணிக மாநாடு நடத்தப்படும் என த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மே 5ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகர் சங்கங்களின் வணிகர் தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா? ஆணையிடுவது எனது வழக்கம் இல்லை. நான் உங்களில் ஒருவனாவேன். அதனால்தான் எங்கள் சங்கத்தில் நான் கொடியேற்றும் போது உங்கள் பகுதி சங்கத்தில் நீங்கள் கொடியேற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

மே 5ஆம் தேதி காலை 10 மணிக்கு உங்கள் சங்கத்தில் குடியேற்றங்கள் எளியவர்களுக்கு உதவுங்கள் மற்றும் சுதேசி உறுதிமொழி பிரகடனம் செய்யுங்கள். சுதேசி நாயகர்கள், காந்திஜி, வ.உ.சி படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செய்யுங்கள். மேலும் இந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படாது. விழா தொடர்பான புகைப்படங்கள் மாவட்ட நிர்வாகிகள் மூலமாகவோ, க்ஷிமீறீறீணீவீஹ்ணீஸீtஸீஸ்sஜீ@ரீணீனீணீவீறீ.நீஷீனீஎன்கிற மின்னஞ்சல் மூலமாகவோ என் பார்வைக்கு அனுப்பி வையுங்கள்.

பேரவையின் வேர்கள் வலுவாக இருக்கிறதா என்பதை இந்த ஆண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் 2023ம் ஆண்டில்  மாநில அளவில் நடக்கும் மாநாட்டில் மீண்டும் நமது பலத்தை உறுதிப்படுத்துவோம். அண்ணல், காந்திஜியின் சுதேசி கொள்கையை இந்திய பொருளாதாரத்தின் உயிர்நாடி சுதேசி தொழில் வணிகத்தை காப்பதன் மூலமாக சுய தொழில்களை மீட்க முடியும். மேலும் இந்த உண்மைகளை உளமார ஏற்கிறேன் எனவும் வணிகர் என்கிற முறையில் சுதேசி தயாரிப்புகளுக்கு முன்னுரிமை தருவேன் எனவும் உறுதியளிக்கிறேன். அந்நிய ஆதிக்கத்தை தக்க துணை நிற்பேன் என உறுதியளிக்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |