Categories
தேசிய செய்திகள்

“மே 16-ம் தேதி முதல்” பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் மே மாதம்  திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பியூசி தேர்வு நடைபெற வில்லை. இந்த வருடம் தொற்று குறைந்துள்ளதால் பி.யூ.சி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாததால் 2022-23 கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முன்கூட்டியே திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி மே 16-ம் தேதி பள்ளி மற்றும் பி.யூ கல்லூரிகளை திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் முதல் பருவம் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறும்.

அதன்பிறகு 2-ம் பருவம் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறும். இதனையடுத்து கோடை விடுமுறை ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை இருக்கும். இந்த கல்வி ஆண்டில் மொத்தம் 60 நாட்கள் அரசு விடுமுறை இருக்கிறது. இதனால் 256 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். மேலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மே 16-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறும். ஆனால் கொரோனா‌ பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படும் நிலையில் இருந்தால் டிஜிட்டல் வழியாக பாடங்கள் நடத்தப்படும். எந்த காரணத்திற்காகவும் குழந்தைகளின் கற்றல் பாதியிலேயே நிறுத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |