மே மாதம் முதல் புதிய முதலீட்டு தொடர்பான பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அவை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
மே மாதம் முதல் முதலீடு சார்ந்த பல்வேறு விதிமுறைகள் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் கடன் வாங்கியவர்கள் சில முக்கிய விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
கடன் வட்டி உயர்வு :
எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கோட்டக் மஹிந்திரா ஆகியவை கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனால் வீட்டுக் கடன், கார் கடன், இஎம்ஐ செலவு அதிகரிக்கும். மேலும், மே 1ஆம் தேதி முதல் வீட்டுக் கடன்களுக்கு அடிப்படை வட்டியை உயர்த்தியுள்ளது எச்டிஎஃப்சி வங்கி. இதனால் வீட்டுக் கடனுக்கு மட்டும் EMI உயரும்.
வங்கிக் கணக்கு கட்டணம் :
சேமிப்பு கணக்கு, சம்பள கணக்கு, வாடிக்கையாளருக்கு மே 1ஆம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதன்படி மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காமல் இருந்தால் கட்டணம் உயர்த்தப்படும்.
மியூச்சுவல் ஃபண்ட் :
மே 1 ஆம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு ஸ்விங் விலை முறை அமல்படுத்தியுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நுழையும் வெளியேறும் முதலீட்டாளர்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மே மாதம் முதல் தங்கள் சொந்த திட்டங்களில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.