மேஷம் ராசி அன்பர்கள்..!! இன்று உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர்கள் உதவிகளை செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். இன்று சாமர்த்தியமான உங்களின் செயல்களைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியம் கொள்வார்கள். முக்கிய நபர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவம் அதிகரிக்கும்.
புதிய தொடர்புகள் மகிழ்ச்சி கொடுப்பதாகவே அமையும். தொழில் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாக தான் இருக்கும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கு. விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் மிகுந்து காணப்படும். கூடுமானவரை படிப்பில் கவனம் செலுத்துங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்