கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் பாதிப்பு குறைந்ததையடுத்து தற்போது நேரடி வகுப்புகள் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விடுதியில் தங்கியிருக்கும் பிற மாணவர்களும் சோதனை செய்யப்பட்டதில் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே விடுதியில் உள்ள பிற மாணவர்களும் நேரடி வகுப்பில் கலந்து கொள்ளாமல் 14 நாட்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளில் பங்கேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.