ஏமன் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக ஏமன் நாடு உள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஏமன் அரசாங்கத்திற்கும், சவுதி படைகளுக்கும் இடையே நடக்கும் தாக்குதல்களை தடுக்க ஐ.நா. சபை கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி போர் நிறுத்தம் அமல்படுத்தியது. இந்த நிலையில் இந்த போர் நிறுத்தம் மேலும் நீடிக்க வேண்டுமென ஏமன் நாட்டிற்கான ஐ.நா. சபை சிறப்பு தூதர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஏமன் நாட்டின் தலைநகரான சன்னாவுக்கு சென்ற அவர் ஹவுதி அரசியல் கவுன்சில் தலைவரான மக்தி அல் மசாத்தை சந்தித்து போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பேசுகிறார். மேலும் ஏமனில் போர் நிறுத்தத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க வேண்டுமென ஏமன் நாட்டின் போரிடும் தரப்புகள் மற்றும் பிராந்திய வல்லரசுகளை ஐ.நா. வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.