Categories
உலக செய்திகள்

மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?…. இங்கிலாந்து அரசு அதிரடி….!!!!

உலகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என  அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதால், வருகின்ற 21 ஆம் தேதி அமல்படுத்த இருந்த ஊரடங்கு தளர்வுகளை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் போரிஸ் ஜான்சன் இத்தகவலை சூசகமாக தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 7,738 ஆக உள்ளது.

 

Categories

Tech |