ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வந்த 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஓபன் டென்னிஸ் தொடரானது வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடராக நடைபெற்று வருவது வழக்கமாகும். அதே போன்று இந்த வருடத்திற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரானது கொரோனா தாக்கத்திற்கு இடையில் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையில் மெல்போர்னில் நடக்கவிருக்கிறது. எனவே இதற்காக உலகின் பல நட்சத்திர டென்னிஸ் வீரர்களும் பல்வேறு இடங்களிலிருந்து தனித்தனி விமானங்களின் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு வந்திறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இதில் பங்கேற்க இருக்கும் வீரர்களும் ஊழியர்களும் கட்டாயம் தனிமைப்படுத்த படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
#AusOpen update… pic.twitter.com/x7m34jhqns
— #AusOpen (@AustralianOpen) January 17, 2021
மேலும் இத்தொடரில் பங்கேற்க வந்த சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்ட 72 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என்றும் பிற நபர்களை சந்திக்ககூடாது என்றும் தடை விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வந்த மூன்று நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய டென்னிஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுளார்கள். எனினும் குறிப்பிட்ட வீரர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. எனவே இத்தொடர் திட்டமிட்ட நேரத்தில் நடைபெறுமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.