மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஒன்பது அல்கொய்தா பயங்கரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் முஸ்சிதாபாதிலும் கேரளாவிலும் எர்ணாகுளத்திலும் தேசிய புலனாய்வு முகமை இன்று அதிகாலை தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது. அப்போது மேற்கு வங்காளத்தில் 6 பேரையும், கேரளாவில் 3 பேரையும், தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. இவர்களுடன் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவரும் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்தது. அதோடு இவர்கள் இரு மாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் குறித்து NIA அதிகாரிகள் கூறுகையில் டிஜிட்டல் சாதனங்கள் ஜிகாதி இலக்கிய மற்றும் துப்பாக்கிகள் வீட்டில் தயாரிக்கக்கூடிய வெடிக்கும் சாதனங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை குறித்துக் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.