மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் ஒரு மந்திரி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் சுந்தர வனத்துறை பகுதி மந்திரியாக மந்துரம் பக்கிரா என்பவர் இருந்து வருகிறார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் சிறப்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு பலியாகட்டா ஐடி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவருக்கு ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அம்மாநிலத்தில் ஏற்கனவே போக்குவரத்து துறை மந்திரி, தீ மற்றும் அவசர சேவைகள் பிரிவு மந்திரி,உணவு மந்திரி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.