மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 20ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஜூன் மாதத்திலிருந்து ‘அன்லாக்’ என்ற முறையின் மூலமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள குறிப்பிட்டப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.
மத்திய அரசு ‘அன்லாக் 4’ பற்றி எந்த ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் தற்போது வரை வெளியிடவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் செப்டம்பர் 7,11,12 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.