Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் முன்னிலை வகிக்கும் மம்தா பானர்ஜி… டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து…!!

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. நடந்துமுடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடக்கம் முதலே அதிக தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னணி வகிக்கின்றது. இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் 205 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது.

மேலும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்க மாநில மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அர்விந்து கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |