Categories
தேசிய செய்திகள்

மேரேஜுக்கு முன் மணமகனின் நண்பர்கள் வைத்த கோரிக்கை…. ஓகே சொல்லி கையெழுத்து போட்ட மணப்பெண்…. இதோ ஒரு சுவாரசிய சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ரகு என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவருக்கும் நவம்பர் 5ஆம் தேதி பாலக்காட்டிலுள்ள கஞ்சிக்கோட்டில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்துக்கு வருகை புரிந்த ரகுவின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் தங்களது நண்பனை தங்களுடன் இரவு 9 மணிவரை நேரத்தை செலவிட அனுமதிக்கவேண்டும் எனக்கூறி ஒரு திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்தை வாங்கினர்.

இச்சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலையாளத்தில் எழுதப்பட்ட பத்திரத்தில் மணமகள் அர்ச்சனா கையெழுத்திட்டு இருக்கிறார். அதாவது அந்த ஒப்பந்த பத்திரத்தில் “திருமணத்துக்குப் பின்பும் என் கணவர் ரகு இரவு 9 மணிவரை அவரது நண்பர்களுடன் நேரத்தை செலவிட அனுமதிக்கப்படுவார். அந்த சமயத்தில் நான் அவரை தொலைபேசியில் தொந்தரவு செய்யமாட்டேன் என உறுதியளிக்கிறேன்” என்று எழுதப்பட்டு உள்ளது.

Categories

Tech |