மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ கார்டு என்ற திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றன. தற்போது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் ரேஷன் கடை சேவைகளை முழுமையாக பெற வேண்டும் என்பதற்காக மேரா ரேஷன் என்ற செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில் புலம்பெயர்ந்து பயனாளிகள் தங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாய விலை கடை அடையாளம் காணவும் மற்றும் அவர்களின் உரிமை, சமீபத்திய பரிவர்த்தனைகள் விவரங்களை சரி பார்ப்பதற்காகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் பொது வினியோகத் துறை செயலாளர் சுதன்ஷீ பாண்டே கூறியது, ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 15.4 கோடி பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ONORC இன் கீழ் செயலில் உள்ளது. மற்ற மேற்கு வங்கம், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒருங்கிணைப்பு அடுத்த சில மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு அடிப்படையிலான மொபைல் அப்ளிகேசன் தற்போது ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சேவைகள் 14 மொழிகளில் மாற்றப்படும். மேலும் ரேஷன் கடை விநியோகஸ்தர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ONORC தொடர்பான சேவைகளை எளிதாக்குவதற்கான இந்த புதிய மொபைல் செயலி நோக்கம் என்று தெரிவித்துள்ளது.