தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 இன்று நடைபெற்று வருகிறது.
# சென்னை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் பிரியா தேர்வாகியுள்ளார்
# கோவை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் கல்பனா தேர்வானார்
# திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி தேர்வு
# திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் தேர்வானார்
# அன்னவாசல் பேரூராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் சாலை பொன்னம்மாள் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
# சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன் போட்டி இன்றி தேர்வானார்
# திசையன்விளை பேரூராட்சி தலைவராக அதிமுகவின் ஜான்சிராணி தேர்வு
# நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் ஜெயந்தி
# ஆவடி மாநகராட்சியின் முதல் மேயர் ஆக தேர்வானார் உதயகுமார்
# கடலூர் மாநகராட்சி மேயராக திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி
# தேனி அல்லிநகரம் நகராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதாவது மறைமுக தேர்தலில் காங்கிரசின் சற்குணத்தை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரேணுப்பிரியா வெற்றி
# மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவியேற்பு
# காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுக அதிகாரபூர்வ வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி
#ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி
# தாம்பரம் மாநகராட்சி மேயராக திமுகவின் வசந்தகுமாரி பதவியேற்பு