மேயர்களை அழைக்கும்போது “வணக்கத்திற்குரிய மேயர்” என்று அழைக்க வேண்டும். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கடந்த அதிமுக ஆட்சியில் வணக்கத்திற்குரிய என்ற வார்த்தையை நீக்கி, சென்னை மேயரை மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என மாற்றினர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தனக்கு மேல் யாரும் இருக்ககூடாது என்று நினைத்து, மாண்புமிகு என்று அரசாணை வெளியிட்டார்.
இதில் மேயருக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் இருக்கிறது. மேலும் தபேதார் என்ற பட்டம் பல உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜமேதார் என்ற பட்டம் ஆளுநர், முதல்வர், மேயர் போன்றோரின் உதவியாளர்களுக்கு மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக இனி மேயரை வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்க வேண்டும் எனும் அரசாணை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பரிசீலிப்பார் என்று அமைச்சர் கூறினார்.