Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையை திறந்து வைத்த…. முதல் திமுக முதல்வர்…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில் மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் காவிரி ஆற்றில் மலர் தூவினார். இதுவரை அமைச்சர்கள் மட்டுமே மேட்டூர் அணையை திறந்து வைத்த நிலையில் அணையை திறந்து வைத்த முதல் திமுக முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் முதல் கட்டமாக வினாடிக்கு 3,000 கனஅடி முதல் 10,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Categories

Tech |