கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு, கேரளா மாநிலத்திலுள்ள வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணா சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது.
இதன் காரணமாக காவிரிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையானது நிரம்பும் நிலையில் இருப்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.