Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே இயங்கும் கோடைகால சிறப்பு ரயில்” கிணத்துக்கடவு, போத்தனூரில் நின்று செல்ல…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!!!

மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே இயங்கும் கோடைகால சிறப்பு ரயில் கிணத்துக்கடவு போத்தனூரில் நின்று செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு வாராந்திர கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகின்றது. இந்த ரயில் பொள்ளாச்சி, கோவை, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ராஜபாளையம், பாவூர்சத்திரம், அம்பை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு கிளம்பி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு செல்கின்றது.

இந்த ரயிலை தென்மாவட்ட மக்கள் மட்டுமின்றி சுற்றுலாபயணிகள் ஆன்மீக தலங்களுக்கு செல்கின்ற பக்தர்கள் சென்று பயன் அடைகிறார்கள். ஆனால் இந்த ரயில் கிணத்துக்கடவு, போத்தனூரில் நின்று செல்லாததால் அங்குள்ள கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் பேசியதாவது, மேட்டுப்பாளையம் – நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் நிறைய பேர் பயணம் செய்து வருகிறார்கள். கோடை விடுமுறையை ஒட்டி இந்த ரயில் நெல்லையப்பர் கோயில், காசி விசுவநாதர், மீனாட்சி அம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், வனபத்ரகாளியம்மன், மாசாணியம்மன், பழனி ஆகிய கோவில்களுக்குச் செல்ல பக்தர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் ஊட்டி, குற்றாலம், வால்பாறை, டாப்சிலிப் போன்ற சுற்றுலா தலங்களுக்கும் செல்வதற்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இதற்கிடையில் பொள்ளாச்சி – கோவை வழித்தடத்தில் கிணத்துக்கடவு போத்தனூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்பதில்லை. இதனால் கிணத்துக்கடவு போத்தனூர் பகுதியில் இருக்கின்ற மக்கள் பொள்ளாச்சி அல்லது கோவைக்கு சென்று ஏற வேண்டி இருக்கிறது. பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு 21 கிலோமீட்டர், கோவையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரமும் இருக்கின்றது.

போத்தனூரில் தொழில்நுட்ப நிறுத்தம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லையிலிருந்து வருபவர்கள் மட்டும் இறங்க முடிகிறது. வணிக நிறுத்தம் கொடுக்காததால் அங்கிருந்து ரயிலில் ஏற முடியவில்லை. எனவே கிணத்துக்கடவு, போத்தனூரில் ரயில் நின்று சென்றால் பலரும் இந்த ரயில் சேவையை பயன்படுத்த முடியும். இதன் மூலம் ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

Categories

Tech |