கலை நிகழ்ச்சியில் மந்திரி ரோஜா மேடையில் ஏறி நடனமாடிய விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில அமைச்சரவையில் ரோஜா கலாச்சாரம், சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பாக நேற்று திருப்பதியில் வைத்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
இதனையடுத்து மந்திரி ரோஜா கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தபோதே திடீரென மேடையில் ஏறி மாணவ, மாணவிகளுடன் நடனமாடி அசத்தியுள்ளார். இறுதியில் ரோஜா மாணவிகளை பார்த்து கைகளால் முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.