Categories
தேசிய செய்திகள்

மேக வெடிப்பால் தொடரும் கனமழை…. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூடாரங்கள்… சிக்கி தவிக்கும் மக்கள்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக கடும் மழை வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கி தவித்தன.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக இன்று கன மழை கொட்டித் தீர்த்தது. ஆறுகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் நிலச்சரிவில் பாலங்கள் மற்றும் சாலைகள் மண்ணில் புதைந்தன. குடியிருப்பு பகுதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இந்த பெரும் வெள்ளத்தால் பங்கதி கிராமத்தில் சாலை பணிகள் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து உள்ளூர் நிர்வாகம் உடனடியாக நிவாரண பணிகளை தொடங்கி வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருவதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |