Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை… “தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்”…. பி ஆர் பாண்டியன் வேண்டுகோள்….!!!!!!!!

திருவாரூர் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் மேகதாது அணை கட்டுவதற்கான மறைமுக சூழ்ச்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கையை விவாத்திற்கு  எடுத்துக் கொள்வேன் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்த்து தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை எனவும் விவாதம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது மட்டுமில்லாமல் இறுதி முடிவை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என அவசியம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் எப்படியாவது கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை விவாதிக்க மறுத்தால் இல்லை அதை ஏற்றுக் கொண்ட கர்நாடகத்திற்கு பாதிப்பு உள்ளாகிவிடும் என்ற அச்சத்தால் கர்நாடக அரசு கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசிடம் ஏற்கனவே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை புறக்கணிப்போம் என பாசன துறை அமைச்சர் அறிவித்திருப்பதை  மறுபரிசீலனை செய்ய வேண்டும் கூட்டத்தில் கர்நாடக அரசு வரவு திட்ட அறிக்கையை விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டு கர்நாடக தவிர்த்து கேரள புதுச்சேரி மாநிலங்களில் ஒற்றை கருத்தோடு அதனை கட்டப்பட்டால் தமிழகம் பேரழிவை சந்திக்க கூடும் என்பதை அடிப்படை ஆதாரத்தோடு எதிர்த்து உரைத்து மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு கொடுத்த அனுமதி தவறானது அது சட்ட விரோதமானது என பதிவு செய்து அதனை நிராகரிக்க வேண்டும்.

அந்த நிராகரிக்கிற முடிவை உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தலைவர் அறிக்கையாக கொடுக்க முன்வர வேண்டும் இல்லை என்றால் பெற்ற உரிமையை பறிபோய் விடுமோ என்கிற பேராபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இதனை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சரும் கடும் முயற்சி செய்திருக்கின்றார் அவரை வாழ்த்துகின்றோம் பாராட்டுகின்றோம். ஆனால் எச்சரிக்கையோடு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு மறுப்பு அரசியல் நமது பாதிப்புகளை எடுத்துரைக்க முன்வர வேண்டும். அதனுடைய ஒற்றைக் கருத்து பெரும்பாலான மாநிலங்களில் ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்

Categories

Tech |