சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை அமைக்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை மக்களின் பொழுதுபோக்கு மையமாக மெரினாகடற்கரை திகழ்கிறது. இங்கு கண்ணகி சிலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி சமாதிகள் இருக்கிறது. மெரினாவின் இயற்கை பார்த்து ரசிக்க தினசரி பல்லாயிர கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மெரினாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு போவதற்கு வசதியாக அவர்களுக்கென பிரத்யேக நடைபாதை அமைக்கு பணியானது மும்முரமாக நடந்து வருகிறது. அத்துடன் விவேகானந்தா இல்லம் எதிரே சவுக்கு, கருவேலம் மரங்களைக் கொண்டு 250 நீளம், 3 மீட்டர் அகலத்தில் நிரந்த பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.