தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல் சார்ந்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கக்கூடிய மிதவை, சென்னை துறைமுக நங்கூரத்தில் இருந்து விலகி கடல் அலையின் திசைவேகத்தில் மெரினா கடற்கரை ஓரம் கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து மெரினா காவல்துறையினருக்கு மீனவர்கள் தகவல் அளித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த மிதவையை கடலில் இருந்து மீட்டெடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அது சென்னை வேளச்சேரியிலுள்ள (National centre for ocean research)க்கு சொந்தமான Floating Data collector கருவி என தெரியவந்தது. இதனிடையில் மெரினா கடற்கரையில் கரையொதுங்கிய 6அடி உயரம் கொண்ட அந்த மிதவையை பாதுகாப்பாக மீட்டு உரிய இடத்தில் ஒப்படைத்த காவல்துறையினருக்கு ஆராய்ச்சியாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.