Categories
மாநில செய்திகள்

“மெரினா கடற்கரையில் இருப்பது போல் அங்கேயும் அமைக்கப்படும்”…. உதயநிதி ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர்.

இதில் உதயநிதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சாக்லைட் மற்றும் பரிசுகளை கொடுத்து கொண்டாடினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர்.

அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு பாதை அமைத்தது போல் மற்ற கடற்கரைகளிலும் சிறப்பு நடைபாதை அமைப்பது பற்றி முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்” என்று கூறினார்.

Categories

Tech |