Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மெரினா உயிர் காக்கும் படை”… கடலில் சிக்கி தவிப்பவர்களுக்கான சாகச ஒத்திகை…!!!!

மெரினா கடற்கரையில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் வரும் சுற்றுலா பயணிகள் அவ்வபோது கடலில் குளிக்கச் செல்லும்போது நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவம் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்கும் விதமாக “மெரினா உயிர் காக்கும் படை” சென்ற வருடம் தொடங்கப்பட்டது.

இது எல்லையோர கடலோர பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், இந்திய கடலோர காவல்படை மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கு வகிக்கிறார்கள். சென்ற வாரம் கடலில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக நேற்று முன்தினமும் ஒத்திகை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு டிஜிபி ஷைலேஷ் குமார் யாதவ் தலைமை தாங்க கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், சென்னை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். அப்போது குளிக்கும் போது அல்லது விளையாடும் பொழுது கடல் அலையில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து ஒத்திகை வீரர்கள் செய்து காட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து கடலின் ஆழமான பகுதிகளில் சிக்கி தவிப்பவர்களை “ஸ்டேண்ட் அப் பெடலிங்” மூலம் காப்பாற்றுவது பற்றியும் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது படகு பழுதாகி கரைக்கு வர முடியாமல் தவிப்பவர்களை காப்பாற்றுவதற்கான ஒத்திகையும் காண்பிக்கப்பட்டது.

Categories

Tech |