Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் மக்களை அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் …!!

மெரினா கடற்கரையில் பொது மக்களை அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு நடத்தினார். மீன் சந்தை அமைந்துள்ள இடங்களை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மெரினா கடற்கரை மற்றும் இணைப்பு சாலையில் உள்ள சாலையோர மீன் கடைகள் அகற்றப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே இரண்டு ஏக்கர் பரப்பளவில் 300 கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த உள்ளதாகவும் நகராட்சி ஆணையர் தெரிவித்தார். மெரினா கடற்கரையில் பொது மக்களை அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |