Categories
மாநில செய்திகள்

மெரினாவில் பயங்கரம் : ஓட ஓட வெட்டி….. பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் பயங்கரம்….!!!!

மெரினாவில் காலை 6 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 6 மணி அளவில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் துரத்தி துரத்தி வெட்டி உள்ளனர். இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்று இளம் சிறார்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வியாசர்பாடி சார்ந்த இளமாறன் என்பவர் போட்டோகிராபராக உள்ளார் என்றும், இவர் தன்னுடைய நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக 6 நபர்களுடன் போட்டோ சூட் எடுப்பதற்காக மெரினா கடற்கரைக்கு வந்து இருந்தார்.

மெரினா கடற்கரையில் நம்ம சென்னை பகுதிக்கு பின்புறம் அமைந்திருந்த போது ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஆனந்த் என்பவர் இளமாறன் மற்றும் அவருடைய நண்பர்களிடம் தகராறு ஈடுபட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தோல் ஆனந்த் ஐந்து பேரை அழைத்துக் கொண்டு கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இளமாறனை துரத்தி வெட்டியதும், இளம்மாறன் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |