Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடிகள்…. மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ்காரர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி மாத்தூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஓய்வு நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரும் சதீஷ்குமார் காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனையடுத்து தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்தி, காதல் ஜோடிடம் புகைப்படத்தை காட்டி உங்கள் பெற்றோருக்கு புகைப்படத்தை அனுப்பி விடுவேன் என மிரட்டி அச்சிறுத்தியுள்ளார். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் சதீஷ்குமார் கேட்ட பணத்தை கொடுத்து புகைப்படத்தை வாங்கி சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணமான இளம்பெண் தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பருடன் மெரினாவுக்கு வந்துள்ளார். அப்போது சதீஷ்குமார் செல்போனில் படம் பிடித்து அந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து பணம் கேட்டு 2 லட்ச ரூபாய் வரை பறித்துவிட்டார். அவரது தொந்தரவு தாங்காமல் இளம்பெண் தனது கணவரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். பின்னர் கணவரின் உதவியுடன் இளம்பெண் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சதீஷ்குமார் போலீஸ் வேடம் போட்டு பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Categories

Tech |