மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதம்பாக்கத்தையடுத்த உள்ளகரத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியாளர் ரவி என்பவர் 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து ரவி மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ரவியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.