சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பணங்கள் பூங்காவில் உள்ள 150 மரங்கள் வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மூன்று பாதையில் இரண்டாம் கட்டம் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு தேவைப்படும் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்ட பணியின் போது திருவிக பூங்காவில் கீழ் சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், பணிகள் நடந்த திருவிக பூங்காவில் பணியின் போது சேதப்படுத்தப்பட்ட பகுதிகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பூங்கா விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பணியின் இப்போது நான்காவது வழித்தடம் அமைப்பதற்காக தியாகராய நகரில் வணிக வளாகங்கள் அருகில் 8.8 ஏக்கர் பரப்பளவில் பசுமையான இடமாக உள்ள பணங்கல் பூங்காவின் ஒரு பகுதியை சென்னை மெட்ரோ ரயில் நிலையம் கையகப்படுத்தி பணிகளை நிறைவேற்றி வருகிறது.
இதனால் தினசரி காலையில் முறையான நடை பயிற்சி, சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது: “மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்களை வெட்டாமல் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்கிறோம். பூங்கா புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரப்படும். பணங்கல் பூங்காவில் 650 மரங்கள் உள்ளது. அவற்றில் 150 மரங்கள் கட்டுமான பணியிலிருந்து கண்டறியப்பட்டு வெட்டப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.