Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல்….. ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்….!!!!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவின் 75 வது சுதந்திர விழாவை கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து மதுரை கலைமாமணி குழுவினரின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற உள்ளது.

அதன்படி காவடி ஆட்டம், மயில் ஆட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் பின்வரும் தேதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும். இன்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரனின் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும், சனிக்கிழமை விங்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராமிய கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு மகிழ மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் மெட்ரோ ரயில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Categories

Tech |