Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் நிலையங்களில்…. இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்….!!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் விம்கோ நகர்,எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடந்துள்ள மருத்துவ முகாமில் 270 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தியாகராயர் கல்லூரிகளிலும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நடக்கவிருக்கிறது. வருகின்ற 24 ஆம் தேதி அன்று ஹைகோர்ட் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், 27 தேதி புதுவண்ணாரப்பேட்டை மற்றும் வடபழனி மெட்ரோ ரயில் நிலையங்களிலும்,29 தேதி அரசினர் தோட்டம் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், மருத்துவ முகாம்கள் நடக்கவிருக்கிறது.

இந்த முகாம் காலையில் 10 மணியிலிருந்து 12 மணி வரை மற்றும் மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிவரை நடக்கின்றது. மருத்துவ முகாமில் உயரம்,எடை ,ரத்த அழுத்தம், சீரற்ற இரத்த சர்க்கரை ,வெப்பநிலை, துடிப்பு போன்ற அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இந்த தகவல்கள் அனைத்தையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |