Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டம்…. சுரங்கப்பாதை அமைப்பதில் திடீர் சிக்கல்…. வெளியான முக்கிய தகவல்….!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டமானது செயல்படுத்தப்பட்டு விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை விரிவுபடுத்துவதற்கான திட்டம் மாநில அரசின் ஒப்புதலுக்காக கிடப்பில் போடப் பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 2-ம் கட்ட பணிகள்  தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி  வரையிலும், சோழிங்க நல்லூர் முதல் மாதவரம் வரையிலும் ரயில் சேவையானது இயக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின்படி மொத்தம் 128 ரயில் நிலையங்கள் வர இருக்கும் நிலையில், மொத்த செலவு 61 ஆயிரத்து 843 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்தில் ரயில் சேவையானது வரவிருக்கும் நிலையில், 42.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்க ரயில் பாதை வரவிருக்கிறது. இந்த சுரங்க ரயில் பாதை திட்டத்தில் 48 ரயில் நிலையங்கள் வர இருக்கும் நிலையில், வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுரங்க ரயில் பாதைகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் டெண்டர் விடுவதற்கான அனுமதியை பெறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கொளத்தூர் முதல் நாதமணி வரையில் சுரங்க ரயில் பாதை ஆனது வரவிருக்கிறது. இந்த பகுதியில் சுரங்க ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை அமைப்பதற்கு எந்த ஒரு நிறுவனமும் முன் வராததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதாவது ஜப்பான் நாட்டின் JICA நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சுரங்க ரயில் பாதைகளை அமைக்கும் நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவையாக இருக்க வேண்டும் அல்லது ஜப்பான் நாட்டை சேர்ந்தவையாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் ஜப்பான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் கூட சுரங்க ரயில் பாதை பணிகளை செய்யலாம். ஆனால் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் ஈடுபடும் பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவையாக இருப்பதால், JICA நிறுவனத்திடம் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், பணிகள் முடிவடைவதற்கு 8 முதல் 9 மாதங்கள் வரை காலதாமதம் ஆகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மாதவரம் முதல் கெல்லீஸ் வரையிலும், ஜங்ஷன் முதல் தரமணி வரையிலும் இரட்டை சுரங்கப் பாதைகள் வர இருப்பதால், பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |