Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் தகராறு…. முன்னாள் எம்.எல்.ஏ வின் டிரைவர் கைது…. சென்னையில் பரபரப்பு…!!

ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை  தாக்கிய வழக்கில் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் ஒருவழிப் பாதையில் செல்லாமல் பணி நடந்து கொண்டிருக்கும் பாதைக்கு எதிரே வந்ததால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவரை வேறு பக்கமாகத் திரும்பிபோகுமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த நபர் அதற்கு மறுப்பு தெரிவித்து ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறு கைகலப்பாக மாறி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ரயில்வே ஊழியர்களை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து கே.கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவருடைய பெயர் முத்து என்பதும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வின்  கார் ஓட்டுனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |