Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் விநியோகம்…. நிறுவனத்தின் அதிரடி முடிவு…!!!!!

whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் பயணம் செய்ய whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ராஜ்யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயில்களில் 1,669 பயணிகள் whatsapp மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணிக்க 14,400 பேர் புதிதாக இணைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Categories

Tech |