Categories
சினிமா தமிழ் சினிமா

மெட்ரோ ரயிலில் பயணம்… அடையாளம் தெரியாத மாதிரி எடுத்த போட்டோ… ட்விட்டரில் வெளியிட்ட ஆர்யா…!!!

நடிகர் ஆர்யா மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அடையாளம் தெரியாதபடி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்

தமிழ் திரையுலகில் நடிகர் ஆர்யா பல ஹிட் படங்களை கொடுத்து ரொமான்டிக் ஹீரோவாக வலம் வருபவர். இவர் நடிகை சாய்சாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனாவால் தாமதமாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் வெளியாவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதையடுத்து ஆர்யா இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை படப்பிடிப்புக்காக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். இதில் ஆர்யா அடையாளமே தெரியாதபடி கேப், மாஸ்க் அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது கொரோனாவுக்கு பின் தன் முதல் பயணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |