Categories
மாநில செய்திகள்

மெட்ரோவில் முககவசம் அணியாதவர்களுக்கு…. ரூபாய் 200 அபராதம்..!!

மெட்ரோவில் ரயிலில் பயணிப்பவர்கள் முககவசம் அணியாமல் சென்றால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் சென்னையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளிகளில் எச்சில் துப்பும் அவர்களுக்கு ரூபாய் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து தற்போது மெட்ரோ ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும்  ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், இல்லையென்றால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் எனவும், மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆராய பறக்கும் படையினர் மற்றும் நிர்வாக அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |