Categories
மாநில செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்….. 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!

தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 16 லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று தமிழகத்தில் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை முதல் டோஸ்ட் தடுப்பூசி செலுத்தாதவர்களும், இரண்டாவது டோஸ் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களும் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் “தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், இதுவரை நடைபெற்ற முகாமில் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 12 . 6 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் போஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன்” கூறியுள்ளார் .

Categories

Tech |