Categories
உலக செய்திகள்

மெகா இன்பச்செய்தி…! இதோ… ரெடியாகிட்டு “ஓமிக்ரான் தடுப்பூசி”…. பயன்பாட்டுக்கு எப்போ வரும்னு தெரியுமா..? அமெரிக்காவின் அதிரடி தகவல்….!!

அமெரிக்க நாட்டின் பைசர் நிறுவனம் நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் ஓமிக்ரானுக்கு எதிரான தனி தடுப்பூசி ரெடியாகிவிடும் என்று தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ஓமிக்ரான் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க நாட்டின் பைசர் நிறுவனம் பொது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் படியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் ஓமிக்ரானுக்கென தனி தடுப்பூசி ரெடியாகிவிடும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பர்ட் கூறியதாவது, புதிதாக தயாரிக்கப்படும் தடுப்பூசி குறித்த ஆய்வுகள் நடைமுறையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓமிக்ரானுக்கு எதிராக தற்போது நடைமுறையிலுள்ள தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பை கொடுத்தாலும் கூட அதனை செலுத்தி கொண்டவர்களுக்கான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தடுப்பூசியாக இது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |