வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆச்சாரியா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் காட்பாதர், போலா ஷங்கர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் போலா ஷங்கர் திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
MEGA🌟 @KChiruTweets
& @MeherRamesh's#BholaaShankar🔱
Launched with a grand Pooja ceremony 🪔#BholaaShankarLaunch
📃#KoratalaSiva @directorvamshi @harish2you @megopichand @dirbobby @IamNShankar
🎬@Ragavendraraoba
🎥on #VVVinayak@AnilSunkara1 @AKentsOfficial @tamannaahspeaks pic.twitter.com/O5Cj4e2Rp3— AK Entertainments (@AKentsOfficial) November 11, 2021
மெஹர் ரமேஷ் இயக்கும் இந்த படத்தை எகே என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகர் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க இருக்கிறார். மேலும் நடிகை தமன்னா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் போலா ஷங்கர் படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. வருகிற 15-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.