மூல நோய் பிரச்சினை உள்ளவர்கள் இந்த துத்தி இலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காரமும் புளிப்பும் அதிகம் சேர்ப்பதால் குடல் புண்ணாகி அலர்ஜி ஏற்பட்டு மூலநோய் ஏற்படுகிறது. இதனால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை தண்ணீரில் நன்கு அலசி எடுத்து அதனை சிறிது சிறிதாக நறுக்கி அத்துடன் பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும். வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் சரியாகும்.