கொரோனா ஊரடங்கின் போது ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சம்பள பிடித்தத்தை தளர்த்தும் பணியை ஏர் இந்தியாவை வாங்கியிருக்கும் டாட்டா குழுமம் தொடங்கியுள்ளது. கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த ஏர் இந்தியாவை வாங்கிய மூன்றே மாதத்திற்குள் ஊழியர்களுக்கான சம்பள பிடித்தம் சரி செய்யும் நடவடிக்கையில் டாட்டா குழுமம் ஈடுபட்டிருப்பது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது நிறுவன ஊழியர்களின் சம்பளப் பிடித்தங்களில் பகுதியளவு மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் இன்டிகோ,விஸ்தரா போன்ற நிறுவனங்களும் தொடங்கியிருக்கின்றன.இந் நிலையில் தங்களது சம்பள பிடித்தங்களை திருத்துமாறு அண்மையில் ஏர் இந்தியா விமானிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இனி வரும் மாதங்களில் சம்பள பிடித்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஏர் இந்தியாஉறுதியளித்திருக்கிறது.