நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து முறையை வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். அதை நாம் கைவிட்டுவிட்டோம். நாம் நூடுல்ஸ்,பீட்சா உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு நோய்க்கு உள்ளாகிறோம். திருமணம் முடிந்த தம்பதிகள் பல பிரச்சனைகளால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். அதன்படி தற்போது பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கு ஒன்று பற்றி அமர்வு நீதிபதி எம்.எல்.ரகுநாத் கூறுகினார். அதாவது, மூன்று வேளையும் வேறு மேகி நூடுல்ஸ் மட்டுமே தனது மனைவி சமைத்துக் கொடுக்கிறார் என்பதற்காக கணவர் விவாகரத்து கேட்டு உள்ளார். இந்த வழக்கின் போது அவரின் கணவர் கூறியது, “தனது மனைவிக்கு நூடுல்சை தவிர வேறு எதுவும் சமைக்க தெரியவில்லை. காலை,மதியம், இரவு என மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுக்கிறார். கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்கி வா என்றால் வெறும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மட்டுமே வாங்கி வருகிறார்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை நாங்கள் மேகி வழக்கு என்று குறிப்பிடோம். இருவருக்கும் மன ஒத்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர் என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து பொதுவாக அப்படி தம்பதிகள் விவாகரத்து வரை வந்து சேர்வது என்பது தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி மட்டுமே. நாங்களும் தம்பதி ஒன்று சேர்க்க இது போன்ற உணர்வு பூர்வமான விஷயங்களை கையில் எடுத்து வருகிறோம். இது பெரும்பாலும் உடல் ரீதியானது அல்ல மன ரீதியான தான். 900 விவாகரத்து வழக்குகளில் வெறும்20,30 வழக்குகளை மட்டுமே ஒன்று சேர்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.